விஜயா காந்தளூர் சாலை ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் மட்டுமே ஆகிறது... பொதுவாக வெளியாட்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை அங்கு களரி, வாள்வீச்சு, விற்போர்முறையும், இவை அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படுகிறது அது வேதாகம முறையில் இது வரை வெறும் சூத்திரங்கள் என்று எண்ணப்பட்டவை பற்றி விரிவான போர் முறையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது....... எனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி உன்னை அங்கு கற்க அனுப்புகிறேன்....
எவ்வளவு நாட்கள் கற்க வேண்டியிருக்கும்?
உனக்கு பக்குவம் ஏற்படும் வரை.....
எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.... விஜயன் எப்படியாவது தவிர்க்க நினைத்தான்.... ஆனால் பழுவூரார் சொன்ன விசயங்கள் அவன் ஆர்வத்தை தூண்டினாலும், குழலியை நினைத்து தவிர்க்க நினைத்தான்...
விஜயா இந்த பருவ வயதில் நீ எடுக்கும் முடிவே உன் வாழக்கையை திசை திருப்ப கூடியது... இதில் தவறான முடிவெடுத்தால் விளைவுகளை நினைத்து வருந்த வேண்டியிருக்கலாம்....
காந்தளூர் செல்வது சரியான முடிவு என்கிறீர்களா?
சரியான முடிவெடுக்க கற்றுக்கொள்ள சரியான இடம் காந்தளூர் என்கிறேன்.
வேறுவழியில்லை.... காந்தளூர் சென்றுவிட்டு ஓரிரு மாதங்களில் திரும்பிவிடவேண்டும் என்று மனதில் நினைத்து சரி என்றான் விஜயன்.
எப்பொழுது புறப்படவேண்டும்?
எப்பொழுது என்பதை விட எப்படி என்பது இன்னும் பொருத்தமானதாக இருக்க முடியும் விஜயா?
எப்படியா?
ஆம்... முதலில் உன்னை சராசரியாக மாற்றிக்கொள்... ஒரு சாதாரண வீரனாக.... நாளை மதுரைக்கு கிளம்பும் வாணியச்செட்டியின் வண்டிகளுக்கு காவல் காக்கும் பொறுப்பு கண்டனுக்கு அவன் கீழ் நீ ஒரு வீரன்...
தந்தையே............? கண்டன் வினவ
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்.... வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏற வேண்டிவரும் கண்டா என்றார் பழுவூரார்,
எதற்காக இந்த வேடம் பழுவூராரே?
விஜயா ஒரு வீடு எழுப்புவது என்றால் முதலில் மனை இருக்கும் இடத்தையும், மனை அமைய போகும் இடத்தில் இருக்கும் சூழலையும், மண்ணின் சுவையும் அஸ்திவாரம் தோண்டும்போது கிடைக்கும் பொருட்கள் வரை என்ன தேவை என்பதை நமது சாஸ்திரங்கள் கூறுகிறது, அதே போல் நீ சாரசரி வீரர்களையும் அவர்களுக்கு உன் மீது பக்தியையும் நம்பிக்கையையும் வளர்க்க அவர்கள் வாழும் சூழலுக்கு உன்னை அனுப்புகிறேன். மேலும் பாண்டிய பேரரசு அவர்கள் அனுமதியில்லாமல் அவர்களுடைய நாட்டில் நுழைந்து அவர்கள் கோட்டைகளையும் நகரங்களையும் பார்க்க வேண்டும் என்றால் இதுதான் வழி
எதற்கு மதுரை செல்ல வேண்டும்- என்று விஜயன் கேட்க
மதுரையின் சிறப்பை வெறும் வார்த்தைகள் மட்டுமே விளக்கிவிடாது விஜயா,,,, அதனால் நீ ஒருமுறை நேரே சென்று பார்,
விஜயா முதலில் கேள்விகள் கேட்பதை விட அதற்கான பதில்களை நீயே கண்டுபிடிக்க கற்றுக்கொள், பல கேள்விகள் கேட்டு ஒரு பதிலை பெறுவதற்கு பதிலாக பல பதில்களை தரும்படி உனது கேள்வி அமைய வேண்டும்,
மறுநாள் காலை எழுந்தவுடன் அவனது ஸ்னானத்திற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக செயப்பட்டிருந்தது.... முழுமையாக நீராடி முடித்த பின்னர் காலை உணவு அவனது அறைக்கு வந்து சேர்ந்தது... ஆனால் குழலி மட்டும் வரவில்லை