விஜயனின் முகம் ஒரு விநாடி கோபக்கனல் காட்டியது... நல்லவேளை செட்டி பார்க்கவில்லை
செட்டி பார்க்கவில்லை இல்லையென்றால் கள்வரினால் ஏற்படும் பயத்தைவிட விஜயனை பார்த்து பயந்திருப்பார்...
கோபக்கனல் காட்டிய முகம் மறு நொடியில் குறுநகை பூத்தது...
குறுநகை பூத்த முகத்தை பார்த்த செட்டி இவன் அலட்சியத்தை பார்த்து... இவர்களை நம்பி வந்தது தவறோ...? என்ற எண்ணமும் அவர் மனதில் ஏற்பட்டது.
தன்னும்மையின் ஒலி கேட்டு குதிரையின் அடிவயிற்றில் தன் கால்களால் தட்டி குதிரையினை சற்று வேகமாக நடக்க செய்து விஜயனின் அருகில் வந்தான் கண்டன்...
விஜயன் தன் அருகில் வந்த கண்டனை திரும்பி பார்தானில்லை... கண்டா பரபரப்பு காட்ட வேண்டாம்... உன் ஆட்களுக்கு சமிக்ஞை கொடு.... அவர்கள் தாக்கும் வரை எதுவும் செய்ய வேண்டாம்....
கண்டன் சரி என்பதற்கு அடையாளமாக தலையசைத்தான்...
குதிரையின் வேகத்தினை குறைத்து பின்னால் வந்த தனது வீரர்களுடன் இணைந்து சூழ்நிலையை தனது வீரர்களுக்கு உணர்த்தினான்...
பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளில் இருந்த பெண்கள் தன்னும்மை முரசின் ஒலி கேட்டு பயந்து வண்டிக்குள்ளே தங்கள் உடல்களை குறுக்கி கால்களை கட்டிக்கொண்டனர். சிறு குழந்தைகளை அழைத்து வந்திருந்த சிலர் தங்களின் குழந்தைகளுக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தங்கள் குழந்தைகளை இறுக அணைத்திருந்தனர்....
சூழ்நிலையை அறிந்திராத சிறுவர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் பயத்தை பார்த்து அழ முற்பட...
குழந்தைகளின் தாய் அழுகுரல் கேட்காமல் இருக்க குழந்தைகளின் வாயை தங்கள் கைகளால் மறைத்தும் கன்னங்களில் தட்டிக் கொடுத்தும் அழுகையை நிறுத்த முயன்றனர்...
அந்த வண்டிகளின் கூட்டத்தில் வந்த கூத்தாடிகளின் வண்டிகளில் கட்டப்பட்டிருந்த சிறு மந்தியும் பயத்தில் க்ரீச்.... க்ரீச்...கீ....கீ.... என சப்தமிட்டு வண்டியின் கூரையில் அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க முயன்றது.... இடுப்பில் பிணைக்கப்பட்டிருந்த கயிற்றால் எங்கும் செல்ல முடியாது தவித்தது,
கண்டனின் ஆட்கள் தைரியமுடன் வர செட்டியின் சொந்த காவல் வீர்ர்களின் பயம் அவர்களின் கண்களிலும்... கால்களிலும் தெரிந்தது...
கண்டனின் ஆட்கள் இதற்கு முன்னர் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்த்து இல்லை அதனால் தைரியமாக இருக்கிறார்களா அல்லது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியின் காரணமா என்று வியந்தனர்....
செட்டியின் காவல் வீர்ர்கள் இருபத்து முவர்.... கண்டனின் ஆட்கள் பதினாறு பேர்.... கண்டன் மற்றும் விஜயன் இருவரையும் கணக்கில் வைத்தாலும் மொத்தம் நாற்பத்தி ஒருவர்....
மெல்ல மெல்ல தன்னும்மையின் ஒலி அருகில் கேட்டது....
பூம்......... என்ற சங்கொலி திடீரென அருகில் கேட்டது.... விஜயன் குதிரையை இழுத்து நிறுத்த....
குதிரையின் கனைப்பு இரவில் ஒலி எழுப்பும் சிறு பூச்சிகளின் குரல்களையும்.... தவளை தன் இணையை அழைக்கும் ஒலிக்கு அடுத்தபடியாக அந்த காடு முழுவதும் எதிரொலித்த்து..
திடீரென நிறுத்தப்பட்டதால் வண்டிகளை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் மாட்டை இழுத்துப்பிடிக்க முயல தங்களின் முன்னால் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் மோதியே நிறுத்த முடிந்த்து.... வண்டிகள் ஒன்றொடொன்று மோதியதால் தடக்.... தடக் என்ற மோதும் ஒலி அமைதியை கிழித்த்து...
சங்கின் ஒலியை தொடர்ந்து..... தட தட வென்று ஓசையுடன் வந்து பிறை சந்திர வடிவில் முன்று திசைகளிலும் சூழ்ந்தனர்...
இரவின் கறுமையை ஒத்த தேகமும்... கைகளில் அணிந்திருந்த சங்கு வளையல்களும்.... செம்பினால் செய்யப்பட்ட வளையல்களும் அவர்களின் கைகளில் நிறைந்திருந்தன... கைகளில் பிடித்திருந்த வேல்கள் அந்த கூட்டதில் இருந்த உயரமான கண்டனை விட மேலும் உயர்ந்திருந்த்து...
வேல்களின் முனைகள் மழுங்கியும் முறிந்தும் இருந்தன... சில வேல்கள் பளபளப்பாக எண்ணை விடப்பட்டு இருந்தாலும் அவை புதியவை அல்ல என்று அறுதியிட்டு கூறமுடியும்...
அவர்களின் உடல் அமைப்புகளை கண்டால் உண்டு கொழுத்து திரிபவர்களாக தெரியவில்லை....
எப்போதும் போல் வரும் வீர்ர்கள் என்று எண்ணியே வந்திருந்த கள்வர் சற்றே அசட்டையுடன் இருந்தனர்... வந்திருப்பது புலிகள் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை...
______________________________