வீட்டின் உள்ளே வந்த விஜயன் வலப்புறம் இருந்த அறையில் உள்ள மஞ்சத்தில் அமர சொன்னதை கேட்டபடி அமர்ந்தான்...
அந்த அறையும் அதன் சுவர்களில் இருந்த வேல்களும் வாள்களையும் கண்ட விஜயன் இந்த சூழ்நிலையில் ஒரு புழு வளர்ந்தால் கூட வீரத்திற்கு குறைவிருக்காது... என்று எண்ணி கொண்டான்..
"இது எனது அறை... இங்கேயே நீ தங்கி கொள்ளலாம்..."
"நான்... உடனடியாய் செல்ல வேண்டும்...."
"எங்கு? மீண்டும் வலுச்சண்டையில் இறங்கவா?" புன்சிரிப்புடன் பளுவூறார் கேட்க
"........ "
"முதலில் உன் காயங்களுக்கு மருந்திடுவோம்..."
"குழலி... குழலி.... அந்த மூலிகைகளை எடுத்து வா..."
சிறிது நேரத்தில் சிலம்பின் ஓசையுடன் வந்தவளை கண்டதும்... குழலி இதுதான உன் பெயர்... உன் குழல்களுக்கு ஏற்ற பெயர்தான்...
வந்தவள் இவனை ஏறிட்டும் நோக்கவில்லை... தலை குனிந்தபடி மூலிகை பெட்டியை பளுவூரரிடம் நீட்டி..."தந்தையே மூலிகைகள்....."
அவள் விஜயனுக்கு இவர்தான் தனது தந்தை என்று உணர்த்த முற்பட்டால் போலும்..
"தாங்கள் மருத்துவரா...?"
"மருத்துவமும் தெரியும்....!"
"காயங்கள் பெரிதாக இல்லை..."
"உன் காயங்களை பரிசோதித்து பின் முடிவுக்கு வரலாம்...."
"தலை காயம் பெரிதாக இருந்தது...." பதட்டபட்டால் அந்த ஏந்திழையாள்..
"பார்க்கலாம்...." என்றார் பளுவூரார்.
தலை காயத்தை பரிசோதித்த பளுவூரார்...
"காயம் சற்று பெரியதுதான்... ஆனால் பயப்பட தேவை இல்லை" பயப்பட தேவை இல்லை அன்று விஜயனுக்கு கூறினாரா இல்லை பதட்டபட்ட குழலிக்கு கூறினாரா?
மூலிகைகளை அரைத்து தலை காயத்தில் வைத்து மெல்லிய துணி கொண்டு கட்டினார்..
அவர் மூலிகைகளை அரைத்த போது... குழலி தன் தந்தைக்கு உதவி என்று கூறிக்கொண்டு அவர்களை விட்டு பிரியாமல் இருந்தால்.
விஜயனுக்கோ அவளை பார்க்கவும் முடியவில்லை... பார்க்காமலும் இருக்க முடியவில்லை...
அவளை பார்த்த போது அவள் தலை நிமிராமல் தந்தைக்கு உதவி கொண்டிருந்தாள். பார்க்காமல் இருந்த போது இவள் விஜயனை பார்த்து கொண்டிருந்தாள்... இவை அனைத்தும் ஓரக்கண்ணால் பளுவூரார் எதையும் கவனிக்காதது போல் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தார்.
"என்ன நடந்தது....?" அவர் விஜயனிடம் கேட்டார இல்லை குழலியிடம் கேட்டாரா?
இருவருமே தங்களை மறந்த நிலையில் இருந்தனர்... கேள்வியை கேட்டதும்
"தந்தையே..." தடுமாறினால் குழலி
"என்ன கேட்டீர்கள்?" விஜயன் அதற்கு மேல் தடுமாறினான்
"என்ன நடந்தது என்று கேட்டேன்?..."
"அதை நான் கூறுகிறேன்....." அந்த மூவருக்கும் சம்பந்தமில்லாத திசையில் இருந்து வார்த்தைகள் வந்தது.
மூவருமே திரும்பி பார்க்க.... அங்கே அந்த வீட்டின் நன்கு உயரமான நிலையை விட உயரமான ஒருவன் நின்று கொண்டிருந்தான்....