06-04-2018, 12:59 AM
சிறுது நேரம் கழித்து வந்த விஜயன் முகம் இறுகியிருந்தது... கிளம்பும்போது எப்படியும் தன்னை பார்துவிட்டுத்தான் செல்வான் என்று காத்திருந்த குழலியையும் கவனிக்காது குதிரையில் தாவி ஏறி குதிரையின் மீது தனது கோபத்தை காட்டி குதிரையின் அடிவயிற்றில் காலால் உதைய... எஜமானின் கோபத்தை அறிந்ததோ இல்லை வலியின் காரணமோ குதிரை விரைந்தது...
குதிரையினை விஜயன் இப்படி விரட்டி செல்வான் என்று கண்டனும் எதிர்பார்கவில்லை... கண்டனும் குதிரையில் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் விரைந்ததை கண்ட மற்ற வீரர்கள் தடுமாறி பின் அவர்களை தொடர்ந்தனர்...
விஜயன் ஒரு காத தூரம் கடந்த பின்னர்தான் தாங்கள் வாணியச்செட்டியின் காவலுக்கு அல்லவா செல்லவேண்டும்...தனது கடமையை மறந்து வந்துவிட்டோமே என்று குதிரையை நிறுத்த சிறிது நேரம் கழித்தே வந்து சேர்ந்த கண்டனிடம்...
வாணியச்செட்டியின் வீட்டிற்கு அல்லவா செல்லவேண்டும்.. எங்கே இருக்கிறது?
இப்போதாவது கேட்க தோன்றியதே? இன்னும் சிறிது தூரம் போயிருந்தால் மதுரைக்கே என்று இருக்கலாம்....
நல்லவேளை இன்னும் சிறிது தூரத்தில் இருக்கிறது வாணியச்செட்டியின் மாளிகை...
மாளிகையா?
அவரது இல்லம்தான் ஒரு மாளிகையின் வசதிக்கு சிறிதும் குறைவில்லாதது.... நீண்ட நாட்களாக தந்தையிடம் உதவிக்கு நல்ல வீரர்களை அனுப்புமாறு பல முறை வேண்டியிருக்கிறார்... இது வரை பதில் ஏதும் சொல்லத தந்தை இப்போது என்னையே அனுப்பி இருக்கிறார்.... ஆனால் உன்னை ஏன் எனக்கு கீழ் கொண்டுவந்தார்?