05-04-2018, 11:10 PM
கண்மணி என்னை நெருங்குவதற்குள் எனக்கும் ஹெமாக்கும் இருக்கும் முறிந்துவிட்ட நட்பை இல்லை காதலை உங்களிடம் பகிர்ந்தே ஆக வேண்டும் அது என் கடமை வேற
" ஹே செந்தில் ஹேமா உன்ன கூப்பிட்டாளாம்டா.. உன்கிட்ட எதோ முக்கியமா பேசணுமாம்"
வாசலருகிலிருந்து வந்த சசியின் குரல் "மக்கு பெஞ்ச்" என்ற பெருமை கொண்ட கடைசி பெஞ்சில் கவிதை என நினைத்து எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த என கவனத்தை கலைத்தது.. அவன் குரல் என செவிப்பறைகளை வந்தடைந்த அடுத்த கணம் நானறியாமல் நடக்கத்துவங்கின என் கால்கள் IXth C லிருந்து ஏழு கிளாஸ் ரூம் தள்ளியிருந்த IX year H ஐ நோக்கி இனம் புரியா மகிழ்ச்சியுடனும், சொல்லத்தெரியா பதற்றத்துடனும்....
"ஹேமா " என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்.. பெயருக்கேற்றார்ப்போல எப்போதும் புன்னைகைகளை ஏந்திக் கொண்டிருக்கும் லட்சணமான முகம், நெற்றியில் விழுந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஓரிரு முடிக்கற்றைகள், ஒவ்வொரு புன்னகையிலும் என்னை புதைக்கும் கன்னத்தின் குழிகள், பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல புருவங்களுக்கு சற்று மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்..
கல்லூரியில் படிக்கும் மொத்த பெண்களில் எண்ணிக்கையில் 80 % மலையாளிப் பெண்களாக இருந்தாலும் எனக்கிவள் "ஸ்பெசல்".. அப்போது எனக்கு 14 வயது அவளுக்கும் அதான் , ஆனால் அந்த வயதிலே எனக்கு காதல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தவள் . சிறு வயது முதல் எனது அதனை விசயங்களிலும் அவள் பங்கு இருக்கும் . அது துக்கம் மகிழ்ச்சி இரண்டிலுமே .
ஹேமாவும் நானும் நல்ல நட்புகள் என்பதை அனைவரறிந்தாலும், என்னுள் நான் பூட்டி வைத்திருக்கும் காதலை அவளறிவாள் என்பதை நானறிவேன். ஒரு போதும் நான் வெளிப்படையாக சொன்னதில்லை என்றாலும் அவளின் புன்னகைகள் சொல்லும் என் பிரியத்தை அவள் புரிந்ததை. எதற்கும் அவசரப்படுவதில்லை அவள், இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.
நிச்சயமாக அடி விழாது என்ற நம்பிக்கையில் போன வாரம் மதிய இடைவேளைக்கு பின்னர் பேசிக்கொண்டிருக்கையில் அவளிடம் "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டேன்..
பதிலேதும் வரவில்லை.. எப்போதும் போல புன்னகையை புன்னகையை சிதறவிடாமல் திடீரென எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.
இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் செந்தில் குரங்கு .. இது நம்ம வாழ்க்கை எடுத்தோம் கவுத்தொமுன்னு முடிவெடுக்க முடியாது. சோ நான் கொஞ்சம் யோசிக்கணும்" என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இல்லை என்று சொல்லாமல் யோசிக்கிறேன் என்றாவது சொன்னாளே என்ற சந்தோசத்திலும் நல்ல பதில் தான் வரும் என்ற நம்பிக்கையிலும்..... ஆனால் இபொழுது பேசும் விதத்தில் இருந்த ஒரு முதிர்ச்சி என்னை அவள் மேல் இருந்த காதலை அதிக படுத்தியது..