முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. இளம் தென்றல் காவேரி நதி வழியாக மென் குளிருடன் மதுரை நகர் முழுவதும் வலம் வந்து எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. ஆனால் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியோ பஞ்சணையில் உறக்கம் வராமல் தவிப்புடன் புரண்டு கொண்டிருந்தாள். அவளது பட்டு மேனி முழுவதும் தக தக என்று கனல் போன்று எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் மனம் அலை பாய்ந்து நிலை கொள்ளாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
துயில் கொள்ள முற்பட்ட அந்த மயில் நடையாளுக்கு தனது தவிப்புக்குக் காரணம் தன் மனதில் எற்பட்டிருந்த மையலே என்று புரியவே செய்தது. ஆனால் என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தாள். அவளது மனம் சென்ற சில நாட்களில் நடந்த இனிய நிகழ்ச்சிகளை அசை போட்டு அந்த நினைவுகளில் பெருமூச்சுடன் பயணம் செய்யத் தொடங்கியது.
பாண்டிய நாட்டு மன்னன் சுந்தர பாண்டியனின் ஒரே மகள் நந்தினி தேவி. அவளது எழில் காணும் எவரையும் கவர்ந்து விடும் கொள்ளை அழகுடன் திகழ்ந்தாள். அவளது பருவச் செழிப்புகளும் வளைவு நெளிவுகளும். வனப்புடன் திளங்கிய மேனியும் காண்பவரை மயக்கிவிடும்.
அன்று ஒரு நாள் நந்தினி தனது அந்தப்புரத்தின் உப்பரிகையில் நின்று வெளியில் மதுரை நகரின் அழகை ரசித்து கண்டு கொண்டிருந்தாள். அப்போது புரவிகளின் சப்தம் கேட்டது. சற்றே திகைப்புடன் சத்தம் கேட்ட திசையில் நோக்க முற்பட்ட இளவரசி, தூரத்தில் ஒரு குதிரையில் கம்பீரமான தோற்றத்துடன் ஒரு வாலிபன் வருவதைக் கண்டாள். அருகில் வர வர அவனது தோற்றம் இன்னும் தெளிவானது. நந்தினி தேவி, அவனை தனது வேல் விழிகளால் கூர்மையாக கவனித்தாள் - அவன் சாதாரணமான வீரனாக இருக்க முடியாது, இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் எனபது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
தேக்கு மரம் போன்று வலிமை வாய்ந்த தோள்களும் புஜங்களும் காந்த சக்தி மிகுந்த கண்களும் அவளைக் கவர்ந்து விட்டன. நந்தினி தேவி, தனது இதயத்தில் ஒரு பகுதி தன்னை விட்டு நீங்கி எங்கோ செல்வது போல உணர்ந்தாள். தன்னையும் அறியாமல் தனது நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொள்ளும் போதே, அந்த வாலிபன் திடீர் என்று அவனது பார்வை மேலே வருவதையும் கண்டாள்.

IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON